விஜய், விஜய்சேதுபதி , TWITTER , SUNTV, இசை வெளியீட்டு, AUDIO LAUNCH,

ரசிகர்களை மெர்சல் பண்ண வேதாவுடன் கலக்க வருகின்ற மாஸ்டர் படத்தின் மாஸ் அப்டேட்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் அவர்கள் நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தின் இசையை அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார். இந்த படம் அடுத்த மாதத்தில் திரைக்குவரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த படத்தின் கதைக்களம் ஆக்க்ஷன் த்ரில்லர் என்று கூறப்படுகின்றது. இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படக்குழு அடுத்தகட்டமாக இசை வெளியீட்டு விழா மற்றும் மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வீடியோவை வெளியிடும் பணிகளை மேற்கொண்டு உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள பிரபல ஸ்டார் ஹோட்டல்லி  வருகின்ற 14ம் தேதி இசை வெளியீட்டு விழாவும், அத்துடன் மார்ச் இறுதிக்குள்  மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் வீடியோவைவும் வெளியிட வாய்ப்புள்ளதாக படக்குழு வட்டாரங்கள் மூலம் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இச்செய்தி விஜய்-விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு மட்டுமல்ல தமிழ் திரைஉலகிற்கும் எதிர்பார்ப்புடன் கலந்த கொண்டாட்டம் யென்ற கூறலாம்.