cinema news
குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகி ஹீரோவாக ஆன மாஸ்டர் மகேந்திரன் பிறந்த நாள் இன்று
1994ம் ஆண்டு வெளியான திரைப்படம் நாட்டாமை. இந்த படத்தில் சரத்குமார், மீனா, சங்கவி, குஷ்பு, போன்றோர் நடித்திருந்தனர். நீண்ட நாட்கள் இப்படம் ஓடியது.
இப்படத்தில் நாட்டாமையாக வரும் விஜயக்குமார் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில் முக்கிய திருப்பமாக ஒரு குற்றம் குறித்து தாத்தா நான் பார்த்தேன் என்று ஒரு சிறுவன் வருவார் அவர்தான் மாஸ்டர் மகேந்திரன் அதற்கு பின் பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.
குறிப்பாக பாண்டியராஜன் நடித்த தாய்க்குலமே தாய்க்குலமே, கும்பகோணம் கோபாலு உள்ளிட்ட படங்களில் நடித்ததன் மூலம் மாஸ்டர் மகேந்திரன் என பெயர் பெற்றார்.
பிறகு வளர்ந்து ஹீரோ ஆனவுடன் சில படங்களில் ஹீரோவாக நடித்தாலும் அவர் நடித்த மாஸ்டர் படமே அவருக்கு நல்ல பெயரை பெற்றுக்கொடுத்தது.
இன்று மாஸ்டர் மகேந்திரனின் பிறந்த நாள்