மாஸ்டர்- கீர்த்தி சுரேஷ் நெகிழ்ச்சி

59

எல்லோருமே கடந்த வருடம் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடினார்கள் அத்தோடு அனைவரின் மகிழ்ச்சியிலும் கொரோனா அரக்கன் மண்ணை அள்ளி போட்டு விட்டது.

தியேட்டரில் சென்று விசிலடித்து மகிழ்ச்சியாக படம் பார்த்தே நீண்ட நாட்களாகி விட்டது. தற்போது மாஸ்டர் படம் மூலம் மீண்டும் மகிழ்ச்சி பிறந்திருக்கிறது.

நீண்ட இடைவேளைக்கு பிறகு தியேட்டரில் கூட்டம் கூட்டமாக ரசிகர்கள் படம் பார்க்க வருகிறார்கள்.

இன்று வெளியான மாஸ்டர் படத்தை நடிகை கீர்த்தி சுரேஷ் சென்னை வெற்றி திரையரங்கில் பார்த்து ரசித்துள்ளார்.அத்துடன் இல்லாது வருடம் முழுவதும் காத்திருந்து தியேட்டருக்கு திரும்பி வருவது மகிழ்ச்சியாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

பாருங்க:  தமிழகத்தில் 5ம் கட்ட ஊரடங்கை அறிவித்த தமிழக அரசு!