மாஸ்டர் பட ஹிந்தி உரிமை யாருக்கு

17

கடந்த பொங்கலுக்கு ரிலிஸ் ஆன திரைப்படம் மாஸ்டர். இப்படம் தமிழில் கொரோனாவுக்கு பிறகு அனைவரையும் தியேட்டருக்கு வர வைத்த படம் என்ற பெயரை பெற்றுள்ளது.

விஜய்யின் நடிப்பும் சரி விஜய் சேதுபதியின் நடிப்பும் சரி இரண்டுமே நல்லதொரு அங்கீகாரத்தை அவர்களுக்கு பெற்று கொடுத்தது. வில்லத்தனத்தில் விஜய் சேதுபதி இப்படத்தில் மிரட்டி இருந்தார்.

தற்போது இப்படத்தின் இந்தி டப்பிங் வெளியாகிவிட்டாலும், இந்தி ரீமேக் உரிமையைக் கைப்பற்ற பல்வேறு தயாரிப்பாளர்கள் போட்டியிட்டு வருகிறார்கள். இதனால் ‘மாஸ்டர்’ படத்தின் உரிமைகளை வைத்திருக்கும் லலித் குமார் பெரும் உற்சாகத்தில் இருக்கிறார்.

விரைவில் இது தொடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானவுடன் அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளது ‘மாஸ்டர்’ படக்குழு.

பாருங்க:  மாஸ்டர் இசை வெளியீடு – ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி !
Previous articleவிஷாலின் 31வது பட அறிவிப்பு
Next articleதிமுக எம்.பி கனிமொழிக்கு கொரோனா தொற்று உறுதி