விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் கடந்த பொங்கலுக்கு முதல் நாள் போகியன்று வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியான பெரிய படம் என்பதால் இப்படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் படம் வந்த சமயத்தில் கலவையான விமர்சனங்களே வந்தன. சுமாரான கூட்டம் என்ற அளவிலேயே இப்படத்திற்கு கூட்டம் வருகின்றது என பேச்சு அடிப்பட்ட நிலையில்,
தற்போது தளபதி விஜய்”யின் முந்தைய படங்கள் செய்த வசூல் சாதனைகளை வெறும் 10 நாளில் #மாஸ்டர் முறியடித்துள்ளது ! மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றியால் OTT க்கு போன அனைத்து திரைப்படங்களும் தற்போது திரையரங்கில் ரிலீஸக்கு காத்திருக்கின்றன என விநியோகஸ்தர்கள் சொல்வதாக விஜய் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.