மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகிறதா

மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகிறதா

கடந்த ஏப்ரல் 14 தமிழ்ப்புத்தாண்டுக்கு வெளியாக வேண்டிய விஜய் நடித்த மாஸ்டர் படம் கொரோனா ஊரடங்கினால் தியேட்டர்கள் மூடப்பட்டதால் வெளியாகவில்லை. தியேட்டர் திறக்க காலதாமதம் ஆனதால் மாஸ்டர் படம் ஓடிடியில் வெளியாகும் என கூறப்பட்டது.இதை தயாரிப்பு நிர்வாகம் அடியோடு மறுத்திருந்தது. அப்படி ஒரு ஐடியாவே இல்லை என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்டது. தியேட்டரில்தான் வெளியாகும் என தயாரிப்பு தரப்பில் கூறப்பட்ட நிலையில் தியேட்டர் திறக்கப்பட்டு 20 நாட்களுக்கு மேலாகியும் இன்னும் மாஸ்டர் வரவில்லை என ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

இந்நிலையில் இப்படத்திற்கான ஓடிடி ரைட்ஸ் நெட்ப்ளிக்ஸ்க்கு விற்கப்பட்டுள்ளது. இதனால் இப்படம் ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தியேட்டரில் வெளியான பிறகுதான் ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.