Entertainment
மாஸ்டர் படத்தில் நீக்கப்பட்ட காட்சி- வைத்து இருக்கலாம் என ரசிகர்கள் வருத்தம் வருத்தம்
விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் பொங்கல் கொண்டாட்டத்திற்காக கடந்த ஜனவரி 13ல் வெளியானது. இந்த படத்தில் 25வது நாள் வெற்றிக்கொண்டாட்டத்தை முன்னிட்டு ஷூட்டிங் சம்பந்தப்பட்ட நிகழ்வுகள், படத்திலிருந்து நீக்கப்பட்ட காட்சிகள் முதலியவை வெளியாகின.
இந்த படத்தில் பெண்களின் உடை குறித்த கேள்விக்கு விஜய் பேசும் வசனம் நன்றாக இருந்தும் படத்தில் வைக்க முடியாத நிலையில் இப்போது அந்த காட்சியை வைத்துள்ளனர். இன்னும் எத்தனை நாளைக்குத்தான் பொண்ணுங்க டிரஸ்ஸ குறை சொல்விங்க என விஜய் பேசும் வசனத்தை ரசிகர்கள் விரும்பி வருகின்றனர்.
மேலும் இந்த காட்சியை படத்தில் வைத்து இருக்கலாம் எனவும் வருத்தத்த்தில் உள்ளனர் ரசிகர்கள்.
