Tamilnadu Flash News

Latest Tamilnadu News | Latest Film News | Tamil Movie Releases | Tamil Cinema |

Latest News Tamil Flash News tamilnadu ஆன்மிகம் தமிழ் ஃபிளாஷ் நியூஸ்

மாசி மாத அமாவாசை-முன்னோர் தர்ப்பணம் பற்றிய விளக்கம்

மாசி மாத அமாவாசை தர்ப்பணத்தின் முக்கியத்துவம் !!!

மாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் அபூர்வமாக சதய நட்சத்திரம் வரும் நாளன்று வரும்.(2.3.2022 புதன் கிழமை அன்று சதயம் நட்சத்திர நாளில் மாசி மாத அமாவாசை வர இருக்கிறது)

அந்த நாளில் எல்லோரும் அவர்களுடைய முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய இயலாது .

ஏனென்றால் மிகவும் குறைந்த அளவில் புண்ணியம் செய்தவர்களாக அவர்கள் இருப்பார்கள்.

மாசி மாதத்தில் அவிட்ட நட்சத்திரம் வரும் நாள் அன்று அமாவாசை வந்தால் அன்று நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும் .(20.2. 2023 திங்கட்கிழமை மதியம் 1.12 வரை இருக்கிறது)

தர்ப்பணம் செய்தபிறகு கண்டிப்பாக அன்னதானம் செய்ய வேண்டும்.

இவ்வாறு செய்வதன் மூலமாக முன்னோர்களாகிய பித்ருக்கள் க்களுக்கு 10,000 பூமி வருடங்கள் தினமும் தர்ப்பணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

பூரட்டாதி நட்சத்திரம் வரும் மாசி அமாவாசை அன்று முன்னோர்களாகிய பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்யவேண்டும் .(13.3.2021 சனி கிழமை அன்று வந்து விட்டது)

அவ்வாறு செய்தால் பித்ருக்கள் ஆகிய முன்னோர்கள் பரம திருப்தி அடைந்து ஆயிரம் யுகங்கள் (பூமி கணக்குப்படி)சுகமாக தூங்குவார்கள்.

நாம் வாழ்ந்து வரும் இந்த கலியுகத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்ய வேண்டியது ஒவ்வொருவருடைய கடமையாகும்.

ஒவ்வொரு மாதமும் குலதெய்வம் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும் மற்றும் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டும்.

இந்த இரண்டையும் செய்யாமல் இருப்பதால்தான் குடும்பங்களும் தனிநபர்களும்

கடன்

நோய்

எதிரி

வம்பு வழக்கு

வில்லங்கம்

போன்ற பல்வேறு விதமான துயரங்களில் சிக்கிக் கொள்கிறார்கள் .

மிகுந்த ஆன்மீக தேடல் உள்ளவர்கள் பிதுர் முக்தி திருத்தலங்கள் என்று போற்றப்படும் ஸ்தலங்களில் தர்ப்பணம் செய்யலாம் .

தமிழ்நாட்டில் பிதுர் முக்தித் தலங்கள் சுமார் 88 உள்ளன.தெற்கு நோக்கி ராஜ கோபுரம் இருக்கும் கோவில்கள் அனைத்தும் பிதுர் முக்தி திருத்தலங்கள் ஆகும். (ஒரு சில பிதுர் முக்தி ஸ்தலங்கள்:- செதலபதி,விருத்தாச்சலம்,திருவையாறு, சோழம் பேட்டை,காசி,கயா,புதுக்கோட்டை அருகில் உள்ள பொன்பேத்தி,மன்னார்குடி அருகே அமைந்துள்ள ஆவிக்கோட்டை, திருக்கோழக்குடி,திருவெண்காடு, ….)

அந்த கோயிலில் வெளிப்பக்கத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வது மிகுந்த புண்ணியம் தரும் .

அந்த புண்ணியமானது நமக்கு

சம்பள உயர்வு

வருமான அதிகரிப்பு

கடன் தீருதல்

பல கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாத நிலையில் மாற்றம்

நோய்கள் தீருதல்

வில்லங்கம் விலகுதல்

பூர்வீக சொத்துக்கள் கிட்டுதல்

துரோகங்கள் மூலம் இழந்த அனைத்தும் திரும்ப கிடைத்தல்

என்று நமக்கு பலன்களாக கிடைத்துக்கொண்டே இருக்கும்.

எதையும் விஞ்ஞான கண்ணோட்டத்தோடு ஆராய்ச்சி செய்யும் மேற்கு நாடுகள் பித்ரு தர்ப்பணம் பின்னணியை அறிந்து கொள்வதற்கு இன்று முதல் குறைந்தது 4,000 ஆண்டுகள் வரை ஆகும்.