கள்ளக்காதலனுடன் கொஞ்சிக் குலவிக்கொண்டிருந்த மருமகளை கையும் களவுமாக பிடிக்க மாமனார் செய்த காரியம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுகோட்டையில் வசிக்கும் பெண் சுலோச்சனா(32). இவரின் கணவர் சிங்கப்பூரில் பணிபுரிந்து வருகிறார். கஷ்டப்பட்டு உழைத்து மாதா மாதம் பணமும் அனுப்பி வந்தார். அதோடு 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் புதுக்கோட்டை வந்த போது மனைவியின் ஆசைப்படி அவருக்கு புதிய வீட்டை கட்டிக் கொடுத்துள்ளார்.
இந்நிலையில், சுலோச்சனாவிற்கு அதே பகுதியை சேர்ந்து வேறு ஒரு வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. எனவே, ஒருவரும் ஒன்றாக பல இடங்களில் ஊர் சுற்றி வந்துள்ளனர். வீட்டிற்கெ சென்று அந்த வாலிபர் அவ்வப்போது சுலாச்சனாவோடு உல்லாசமும் அனுபவித்து வந்துள்ளார்.
இந்த விவகாரம் சுலோச்சனாவின் மாமனாருக்கு தெரிய வந்தது. எனவே, அவரை கையும் களவுமாக பிடிக்கும் நாளுக்காக காத்திருந்தார். அதன்படி, சுலோச்சனா கள்ளக்காதலனுடன் வீட்டினுள் உல்லாசம் அனுபவித்துக் கொண்டிருந்த போது வீட்டின் வெளியே பூட்டி விட்டார். இதனால், வீட்டின் பின்புறம் வழியாக சுலோச்சனா தனது கள்ளக்காதலனுடன் தப்பி ஓடிவிட்டார். இதையடுது மருமகள் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.