rape

கள்ளக்காதலனுடன் காட்டுக்குள் உல்லாசம் ; அங்கு வந்த 6 பேர் : இறுதியில் நேர்ந்த விபரீதம்

கள்ளக்காதலுடன் தனிமையில் இருக்க காட்டுக்குள் சென்ற பெண்ணை ஒரு கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள ஊர் சின்னமநாயக்கன்பாளையம். இங்கு தனியார் ஆலையில் திருமணமான ஒரு பெண் பணிபுரிந்து வருகிறார். அந்த ஆலையில் அவருடன் வேலை பார்க்கும் தினேஷ் என்ற வாலிபருடன் அவருக்கு கள்ளக்காதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் தனிமையாக இருக்க அருகிலிருந்த காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளனர்.

அப்போது திடீரென 6 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்துள்ளது. தினேஷை தாக்கி விரட்டிய அவர்கள் அப்பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர். இதற்கிடையில் ஊருக்குள் வந்த தினேஷ் அங்கிருந்தவர்களை அழைத்துக்கொண்டு மீண்டும் காட்டுக்குள் சென்றார். பொதுமக்களை கண்டபின் அங்கிருந்த ஆறு பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். அதன் பெண் காவல் நிலையத்தில் அந்த பெண் தரப்பாக புகார் கொடுக்கப்பட்டது. அந்த 6 பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சின்னமநாயக்கன்பாளையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.