இளம்பெண்ணின் வாழ்க்கையில் விளையாடிய டிக்டாக் – நகையுடன் தப்பி ஓட்டம்

319

டிக் டாக் வீடியோ போடக்கூடாது என குடும்பம் வலியுறுத்தியதால் திருமணமான இளம்பெண் நகையுடன் மாயமான சம்பவம் சிவகங்கை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்ந்த வனிதா என்பவருக்கும், சானாவூரணி பகுதியை சேர்ந்த ஆரோக்கியலியோ என்பவருக்கும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி திருமணம் நடைபெற்றது. சிலமாதங்கள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த பின் லியோ சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று விட்டார். தனியாக இருந்த வனிதா டிக்டாக் வீடியோவில் பொழுதைப் போக்கி வந்துள்ளார். அப்போது திருவாரூரை சேர்ந்த அபி என்கிற பெண்ணுடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டது. எனவே இருவரும் ஒருவரை ஒருவர் சந்திப்பது. இருவரின் வீட்டுக்கு இருவரும் செல்வது. இருவரும் சேர்ந்து டிக்டாக் வீடியோ வெளியிடுவது வென நெருக்கமாக பழகி உள்ளனர்.

tiktok video

அபியின் மீது அதீத அன்பு கொண்ட வனிதா வீட்டில் இருந்த நகைகள் பணம் ஆகியவற்றை அவருக்காக செலவு செய்ததாக தெரிகிறது. இதை சிங்கப்பூரிலிருந்து லியோ கண்டித்துள்ளார். அபியுடனான நட்பை கைவிடும்படி கூறியுள்ளார். ஆனால் வனிதா அவரின் பேச்சைக் கேட்கவில்லை. எனவே, சமீபத்தில் சிங்கப்பூரிலிருந்து லியோ தேவகோட்டை வந்துள்ளார். அபியின் நட்பை தவிர்க்கும்முடி நேரில் வலியுறுத்தியும் வனிதா கேட்கவில்லை. மேலும் அவரது கையில் அபியின் உருவத்தை பச்சை குத்தி வைத்திருந்ததை கண்டு லியோ அதிர்ச்சி அடைந்தார்.

எனவே இதுபற்றி அவரின் பெற்றோரிடம் கூறி அவருக்கு அறிவுரை செய்து அனுப்பி வைக்கும்படி அவர்களின் வீட்டிற்கு வனிதாவை அனுப்பி வைத்தார். அவர்களும் வனிதாவுக்கு அறிவுரை கூறியுள்ளனர். அமைதியாக தலையாட்டிய வனிதா அன்று மாலையே வீட்டில் இருந்த 25 பவுன் நகை எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார். இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது வனிதாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேவகோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வனிதா அபியை தேடி சென்று இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாருங்க:  மீண்டும் ஒரு சாதி அவலம்.. கொட்டும் மழையில் பிணம் எரிப்பு - மதுரையில் அதிர்ச்சி