ஜோடி படத்தில் சிறிய வேடத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை த்ரிஷா. இருப்பினும் இவர் நடித்த மெளனம் பேசியதே படமே இவருக்கு சிறப்பானதொரு அறிமுக படமாக வந்தது.
பல்வேறு விதமான படங்களில் நடித்து விட்ட த்ரிஷா, விஜய், அஜீத், சூர்யா, தனுஷ்,சிம்பு, ரஜினி, கமல் என அனைத்து ஹீரோக்களுடனும் ஜோடியாக நடித்து விட்டார்.
நீண்ட வருடமாக திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் த்ரிஷா தெருநாய்கள் மற்றும் வாயில்லா ஜீவன்கள் மீது மிகுந்த பற்றுக்கொண்டவர்.
37 வயதான த்ரிஷா இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் இருந்து வருகிறார். இருப்பினும் திருமணம் பற்றி தற்போது வாய் திறந்துள்ள த்ரிஷா, என்னை நன்றாக புரிந்து கொள்பவர் வந்தால்தான் திருமணம் செய்து கொள்வேன் இல்லை என்றால் இப்படியே இருந்து விடுவேன் என கூறியுள்ளார்.