திருவீழிமிழலை விழிநாதேஸ்வரர் கோவில் இது அப்பர் சுந்தரரால் பாடல்பெற்ற ஸ்தலமாகும். இந்த ஸ்தலம் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
கும்பகோணத்தில் இருந்து பூந்தோட்டம் செல்லும் சாலையில் இக்கோவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மற்ற கோவில்களில் இல்லாத சிறப்பு இந்த கோவிலில் என்ன என்றால் இந்த கோவிலில் ஸ்வாமியும் அம்பாளும் தனி சன்னதியில் காட்சி அளிக்கின்றனர்.
இங்குள்ள சிவன் சுயம்பு லிங்கமாகும்.
இங்கு சிவன் காசியாத்திரைக்கு செல்லும் மாப்பிள்ளை கோலத்தில் இருக்கிறார்.
திருமணமாகாதவர்கள், நீண்ட நாள் திருமணத்தடை உள்ளவர்கள், பிரிந்திருப்பவர்கள் இந்த ஸ்வாமியை வழிபட்டால் விவாகம் நடக்கும், பிரிவினை தீரும் தம்பதிகள் ஒற்றுமையுடன் இருப்பார்கள்.
ஒருமுறை இக்கோவிலுக்கு சென்று வாருங்கள் நல்லதே நடக்கும்.