மாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை

மாரியம்மனும் காளியம்மனும் சும்மா விடாது தமிழக பிஜேபி தலைவர் எச்சரிக்கை

சமீப காலமாக ஹிந்து மத எதிர்ப்பு பேச்சுக்கள் அன்லிமிட்டெட் ஆக சென்று கொண்டிருக்கின்றன.ஹிந்து மதம் பற்றிய தவறான கருத்துக்களை வன்மமாக பரப்பும் அரசியல்வாதிகள் அதிகரித்து வருகின்றனர்.

சமீபத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் மனு ஸ்ம்ருதியில் பெண்கள் விபச்சாரிகள் என கூறப்பட்டிருக்கிறது என பேசியது பல ஹிந்துக்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.

திருமாவளவனை பல ஹிந்து அமைப்புகள் கண்டித்து வரும் வேளையில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகனும் வித்தியாசமான முறையில் அதே முறையில் காட்டமான முறையில் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவர் கூறி இருப்பதாவது.

பெண்களை இழிவாக பேசிய உங்களை எங்கள் மீனாட்சியம்மன் மாரியம்மன் போன்ற பெண் தெய்வங்கள், சும்மா விட மாட்டார்கள்.
தமிழ் கலாச்சாரம் மற்றும் பண்பாட்டுக்கு எதிராக பேசி வரும் இவர்கள் தமிழ் விரோதிகள் மட்டுமல்ல, தேச விரோதிகள் ஆவார்கள், இவர்களை தூக்கி எறிய இந்த விஜயதசமி நாளில் சங்கல்பம் ஏற்போம்!
– தமிழக பாஜக தலைவர் திரு.எல்.முருகன் அவர்கள்
இவ்வாறு முருகன் கூறியுள்ளார்.