Entertainment
மாரிதாஸ் விடுதலை- கிஷோர் கே ஸ்வாமி விடுதலை
தமிழகத்தில் சமூக வலைதளங்களில் பல பரபரப்பான கருத்துக்களை கூறி அதன் மூலம் புகழடைந்தவர்கள் கிஷோர் கே ஸ்வாமி மற்றும் மாரிதாஸ்.
இவர்கள் இருவரும் அரசுக்கு எதிராக பேசுவதாக கூறி சிறையில் அடைக்கப்பட்டனர். பழைய வழக்குகள் தோண்டி எடுக்கப்பட்டது அந்த வழக்கை அடிப்படையாக வைத்து இவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதுவும் கிஷோர் கே ஸ்வாமி குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் மாரிதாஸ் மீதான வழக்குகளுக்கு முகாந்திரம் இல்லை என அவரை நீதிமன்றம் விடுதலை செய்ய சொல்லி விட்டது.
அவரது வழக்குகளையும் தள்ளுபடி செய்துவிட்டது. இந்த நிலையில் கிஷோர் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டு அவரும் நேற்று விடுதலை செய்யப்பட்டார்.
