Published
9 months agoon
இயக்குனர் ரஞ்சித் தயாரிப்பான பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் கவனம் ஈர்க்கப்பெற்றவர் மாரி செல்வராஜ். இப்படத்தில் ஜாதிய ரீதியாக மக்கள் ஒடுக்கப்படுதலை பற்றி காட்சிப்படுத்தி இருந்தார்.
அதே போல் அவரின் அடுத்த படமான கர்ணன் திரைப்படமும் அவ்வகை படமேயாகும். இரண்டு படமும் வசூலிலும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் பிரபல நடிகர் பகத் பாஸிலை வைத்து மாமன்னன் என்ற படத்தை மாரி செல்வராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகர் வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் அரசியல்வாதியாக நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சேலம் மாவட்டம் ஏற்காட்டில் நடந்து முடிந்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சேலத்தில் நடந்து வருகிறது.
வடிவேலு, பகத் பாஸில் நடித்து வரும் இப்படத்திற்கு இப்போதே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
மதத்தின் பெயரால் நடக்கும் ஏமாற்றுவேலையை தோலுரிக்க வரும் நிலை மறந்தவன் பட ட்ரெய்லர்
மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கும் வடிவேலு படப்பெயர் வெளியீடு
விக்ரம் படத்தின் காட்சியினை வெளியிட்ட லோகேஷ்
மாரி செல்வராஜுக்கு ஏற்பட்ட சோகம்
பகத் பாஸிலுக்கு இன்று பிறந்த நாள்- லோகேஷ் வாழ்த்து
மாரி செல்வராஜின் புதிய படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையா