Published
11 months agoon
வடிவேலு இம்சை அரசன் படத்தில் நடித்தாலும் நடித்தார் தொடர்ந்து அவருக்கு மன்னர் கால டைப் படங்களிலேயே வாய்ப்புகள் வந்தது. அதற்கு பிறகு வந்த இந்திரலோகத்தில் அழகப்பன் சரியாக போகவில்லை வர இருந்த இம்சை அரசன் 2 வரவில்லை.
இந்த நேரத்தில் பல வருடங்கள் திரையில் அதிகம் வராமல் இருந்த வடிவேலு தற்போது ரீ எண்ட்ரியாக நாய் சேகர் படத்தில் நடித்து வருகிறார்.
மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் மாமன்னன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், பகத் பாஸில் போன்றோரும் இப்படத்தில் நடிக்க இருக்கின்றனர்.
இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.