முன்பு திமுக தலைவர் கருணாநிதி இருந்தபோது அடிக்கடி மாநாடு நடைபெறும். கழக வளர்ச்சிக்காக மகளிர் அணி மாநாடு, இளைஞர் அணி மாநாடு என தமிழகத்தின் முக்கிய ஊர்களில் நடைபெறும்.
தற்போது அவ்வாறு அதிகம் நடைபெறுவது இல்லை. இருப்பினும் தற்போது தேர்தல் நெருங்குவதால் விரைவில் மாநாடு நடக்க இருக்கிறது.
வரும் மார்ச் 14ல் திமுகவின் மாநில மாநாடு நடக்க இருக்கிறது. இந்த மாநாடு திருச்சியில் நடக்க இருக்கிறது.
கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இதை அறிவித்தார்.