ஆதி நடிப்பில் கடந்த 2017ல் வெளியான திரைப்படம் மரகத நாணயம். வித்தியாசமான கதைக்களம் கொண்ட மர்ம திரைப்படமான இந்த திரைப்படம் எல்லோருக்கும் பிடித்தது என சொல்லலாம்.
இந்த படத்தை இயக்கியவர் ஏ.ஆர்.கேசரவணன் இவர் மீண்டும் ஒரு படத்தை இயக்குகிறார். முன்பு ஆதியை இயக்கிய இவர் தற்போது ஹிப் ஹாப் ஆதியை இயக்குகிறார்.
சத்யஜோதி பிலிம்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. இவர்கள் சில வருடங்களாக ஹிப் ஹாப் ஆதியை வைத்தே சிறிய பட்ஜெட் படங்களை தயாரித்து அதில் ஓரளவு லாபமும் ஈட்டி வருகிறார்கள்.
தற்போதும் ஹிப் ஹாப் ஆதியை ஹீரோவாக போட்டு ஏ.ஆர்.கேசரவணன் இயக்கத்தில் இந்த படத்தை தயாரித்து வருகின்றனர். இப்படத்திற்கு வீரன் என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பொள்ளாச்சியில் எளிமையாக தொடங்கியது.