ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ், மற்றும் புத்தாண்டு நிகழ்ச்சிகளின் போது இராமநாதபுரத்தை சேர்ந்த பேக்கரி நிறுவனமான ஐஸ்வர்யா பேக்கரீஸ் பிரபலங்கள் யாராவது ஒருவருடைய ஆளுயர கேக்கை பிரமாண்டமாக செய்து வைக்கும்.
கடந்த வருடம் இசைஞானி இளையராஜாவின் கேக்கை பிரமாண்டமாக செய்து அசத்திய நிலையில், இந்த வருடம் சமீபத்தில் மறைந்த மாரடோனாவின் கேக்கை செய்து அவரை பெருமைப்படுத்தியுள்ளது.
பிரபலங்களின் கேக்கை வைப்பது எதற்காக என்றால் அவர்கள் செய்தது போல் சாதனைகள் செய்ய வேண்டும் முயற்சி எடுக்க வேண்டும் என்பதே இந்த பேக்கரி நிறுவனம் பிரபலங்களின் கேக் செய்து வைப்பதின் முக்கிய நோக்கமாக உள்ளது.
6 அடி உயரத்தில் 60 கிலோ சர்க்கரை மற்றும் 270 முட்டைகளை கொண்டு நான்கு நாட்களில் தயாரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி நிறுவனர் வெங்கட சுப்பு தெரிவித்துள்ளார்.

