நிரூபித்தால் மொட்டை அடித்துக் கொள்கிறேன் – ரஜினிக்கு சவால் விட்ட மன்சூர் அலிகான்

327

தூத்துக்குடி ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராடிய போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அப்பாவி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக பலியாகினர்.

நாட்டையே உலுக்கிய இந்த விவாகரம் தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் ரஜினி, இப்போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டாதாலேயே போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்தார். அவரின் இந்த பேட்டி சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஒரு திரைப்பட விழாவில் பேசிய மன்சூர் அலிகான் ‘ஸ்டைர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் சமூக விரோதிகள் புகுந்துவிட்டதாக கூறிய ரஜினிகாந்த் அதை நிரூபித்தால் நான் மொட்டை அடித்துக் கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

பாருங்க:  சேரனுக்கு நன்றி தெரிவித்த ஸ்னேகன்