Latest News
மனோரமா வாழ்க்கை வரலாற்றில் நடிக்க ஆசைப்படும் ஐஸ்வர்யா
நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் தமிழில் திறமையான நடிகையான இவர் தமிழ் தெலுங்கு உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கதையின் நாயகியாக கனமான பாத்திரங்களில் பல படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த க/பெ ரணசிங்கம் திரைப்படம் வரும் அக்டோபர் 2ல் வெளிவருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஸ் மனோரமாவின் பயோபிக்கில் நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.
தமிழில் அதிகமான படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்த நடிகை மனோரமா கடந்த 2015ம் ஆம் அக்டோபர் மாதம் இயற்கை எய்தினார்.
காக்கா முட்டை போன்ற கதையம்சமுள்ள படத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் தான் ஒரு இளம் வயது கதாநாயகி என்பதை மறந்து கதைக்கு தேவையான கனமான பாத்திரத்தில் நடித்திருப்பார். அதனால் இது போல கனமான நடிகையின் கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா ராஜேஸ் நடிப்பது ஏற்புடைய விசயம்தான் மறுப்பதற்கில்லை.
