ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் அவருக்கு டூப் போட்டது இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜ்தான் என்பது தெரியவந்துள்ளது.
ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கி வெளியான கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் எந்திரன். சமீபத்தில் அதன் இரண்டாம் பாகம் கூட வெளியானது. இந்த படத்தில் ரஜினி விஞ்ஞானியாகவும், ரோபாட்டாகவும் இருவேறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் அந்த படத்தில் ரஜினியின் கதாபாத்திரத்துக்கு டூப் போட்டது இயக்குனர் பாரதிராஜாவின் மகனான மனோஜ் பாரதிராஜாதான் என்பது வெளியாகியுள்ளது. இது சம்மந்தமான புகைப்படத்தை அவர் தனது சமூகவலைதளத்தில் வெளியாகியுள்ளது.
மனோஜ் தாஜ்மஹால், அல்லி அர்ஜுனா மற்றும் அன்னக்கொடி ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவர் இயக்குனர் ஆகும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.