cinema news
சூர்யா சர்ச்சை- மனோபாலாவின் கருத்து
சமீபத்தில் வெளியான ஜெய்பீம் படத்தில் வன்னியர் அமைப்பினரை தவறாக காட்டியதாகவும் படத்தில் வில்லனின் கதாபாத்திரத்துக்கு ஒரிஜினல் நபரின் பெயரை மறைத்து வேறு பெயரை வைத்ததாகவும் சர்ச்சை எழுந்தது.
இது குறித்து பாமகவின் அன்புமணி சூர்யாவிடம் கடிதம் எழுதி கேட்க அதற்கு சூர்யா நாகரீகமாக அப்டியெல்லாம் இல்லை என மறுப்பு கொடுக்க, மற்றொரு பாமக எம்.எல்.ஏ சூர்யாவை அடிப்பவர்களுக்கு பரிசு என அறிவிக்க என சர்ச்சைக்கு மேல் சர்ச்சையாய் சென்று கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து நடிகர் இயக்குனர் மனோபாலா கூறியுள்ள கருத்து என்னவென்றால்
நல்ல படம்…ரசித்துவிட்டு போங்களேன்…இதையெல்லாம் தாண்டி வந்தவர்தான் சூர்யா என சூர்யாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார் மனோபாலா.