Tamil Cinema News
கமலா ஹாரிஸ் துணை அதிபர்- மன்னார்குடிக்காரர்களின் வாழ்த்து
அமெரிக்காவில் இரண்டு நாட்களாக இழுபறியாகி கொண்டிருந்த ஓட்டு எண்ணிக்கை முடிவடைந்து ஜோபிடன் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றுள்ளார் இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவராவர் பூர்விகம் தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியாகும்.
இவர் வெற்றி பெற்றதை அடுத்து மன்னார்குடியை பூர்விகமாக கொண்ட பிரபலமான அரசியல்வாதிகளான டிடிவி தினகரன், டி.ஆர்.பி ராஜா ஆகியோர் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நமது மன்னை மண்ணை சேர்ந்த கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் என மன்னார்குடி தொகுதியின் எம்.எல் ஏவும் திமுக மூத்த தலைவர் டி.ஆர் பாலுவின் மகனுமான டி.ஆர்.பி ராஜா தெரிவித்துள்ளார்.
