மீண்டும் தியேட்டரில் டிஜிட்டலில் மன்மதன் திரைப்படம்

80

கடந்த 2004ம் ஆண்டு வெளியான திரைப்படம் மன்மதன். சிம்பு நடிக்க முருகன் என்பவர் இயக்கியதாக சொல்லப்பட்டது இந்த படம். பின்பு முருகன் சிம்பு என்னை பெயருக்கு இயக்குனர் என போட்டுவிட்டு எல்லாவற்றையும் மாற்றிவிட்டார் என்ற பிரச்சினைகள் ஒரு பக்கம் விஸ்வரூபம் எடுத்தது.

இருப்பினும் ஒரு வழியாக மன்மதன் திரைப்படம் வெளியாகி ஓரளவு வெற்றி பெற்றது. கொஞ்சம் ப்ளே பாய் வேடத்தில் சிம்பு நடித்த த்ரில்லர் படம் இது.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்துக்கு இசையமைக்க சந்தானம் இப்படத்தில் காமெடி வேடத்தில் அறிமுகம் ஆனார். ஜோதிகா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். காமெடியில் கவுண்டமணியும் இப்படத்தில் நடித்திருந்தார்.

இந்த படம் வெளியாகி 17 வருடங்கள் ஆன பிறகு மீண்டும் இப்படம் டிஜிட்டலில் வெளியாகிறது.

வரும் மார்ச் 19 முதல் இப்படம் மீண்டும் வெளிவருகிறது

பாருங்க:  பாம்பு சிம்பு வம்பு
Previous articleகார்த்திக் சுப்புராஜ் இயக்கும் விக்ரம் படம்
Next articleஈசாவில் குவிந்த சினிமா பிரபலங்கள்