பிரபல மலையாள நடிகர் திலீப்பை திருமணம் செய்தவர் மஞ்சு வாரியர். சிறப்பாக சென்று கொண்டிருந்த இவர்களது வாழ்க்கையில், திலீப்புக்கு நடிகை மஞ்சு வாரியருடன் ஏற்பட்ட தொடர்பால் அனைத்தும் பிரச்சினையானது.
மஞ்சு வாரியரும் திலீப்பிடம் இருந்து விவாகரத்து பெற்றார். இந்த நிலையில் மஞ்சு வாரியரிடம் சொல்லி கொடுத்ததாக பிரபல நடிகை ஒருவரை திலீப் பாலியல் ரீதியாக துன்புறுத்தினார் என்று அவர் மீது வழக்கு நடந்து வருகிறது.
மஞ்சு வாரியர் தமிழில் அசுரன் படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்தார். இந்த நிலையில் மஞ்சு வாரியரிடம் மலையாள இயக்குனரான சணல்குமார் சசிதரன் என்பவர் அடிக்கடி வாட்ஸப் வழியாக குறுஞ்செய்தி அனுப்பி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி டார்ச்சர் செய்து வந்துள்ளார்.
திடீரென நடிகை மஞ்சு வாரியருக்கு ஆபத்து எனவும் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டார். சசிதரனின் தொடர் செயல்பாடுகளால் கோபமடைந்த மஞ்சு வாரியர் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது சசிதரன் கைது செய்யப்பட்டுள்ளார்.