நேபாளத்தில் சமீபத்தில் சமூக ஊடக தடை மற்றும் அதனைத் தொடர்ந்து வெடித்த போராட்டங்கள் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தன. அந்த போராட்டங்களில் 19 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில், நேபாளத்தைச் சேர்ந்த பிரபல பாலிவுட் நடிகை மனிஷா கொய்ராலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உணர்ச்சி மிகுந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
அவர் தனது பதிவில், “இன்று நேபாளத்திற்கு உண்மையான ‘கருப்பு நாள்’. மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு வன்முறை ஒரு பதிலாக இருக்கக்கூடாது. நாட்டின் எதிர்காலத்தை உருவாக்கும் இளைஞர்களின் குரலைக் கேட்க வேண்டும்” எனக் குறிப்பிட்டார்.
View this post on Instagram
மேலும், மக்கள் குரலை அடக்குவதற்கான எந்த நடவடிக்கையும் நாட்டின் ஜனநாயக அடித்தளத்திற்கு கேடு விளைவிக்கும் என அவர் வலியுறுத்தினார். தனது தாய்நாட்டில் நிலவி வரும் சூழ்நிலை குறித்து கவலை தெரிவித்த அவர், உலகம் முழுவதும் நேபாள மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்றும் கூறினார்.
இந்த பதிவு ரசிகர்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வைரலாகி, மனிஷா கொய்ராலாவின் தைரியமான கருத்து பாராட்டுக்குரியதாக மாறியுள்ளது.

