பொன்னியின் செல்வன் அப்டேட்

பொன்னியின் செல்வன் அப்டேட்

மணிரத்னம் இயக்கி வரும் புதிய திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய கதையான இந்த கதை எழுதி இயக்குவது கடினம் என்றே பல ஆண்டுகளாக சொல்லப்பட்டு வந்தது.

இதை ஒரு சவாலாக கையில் எடுத்துள்ள மணிரத்னம் கடந்த 2019ல் இந்த ப்ராஜெக்டை கையில் எடுத்தார்.

தற்போது பெருமளவு படப்பிடிப்பை முடித்து விட்டதாக கூறப்படுகிறது. ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

இப்போது அந்த காட்சிகள் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டதாகவும் தெரிகிறது.

இதில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா உள்ளிட்ட பெரும் சினிமா பட்டாளமே நடித்து வருகிறது.இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.