Connect with us

மணிகண்டனின் செல்ஃபோன் எங்கே போலீஸ் விசாரணை

Latest News

மணிகண்டனின் செல்ஃபோன் எங்கே போலீஸ் விசாரணை

முந்தைய அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் மணிகண்டன். இவர் மீது சாந்தினி என்ற நடிகை பாலியல் புகார் தெரிவித்தார். தன்னுடன் 5 வருடங்கள் குடும்பம் நடத்தியதாகவும் இப்போது கருக்கலைப்பு செய்து தன்னை ஏமாற்றி விட்டதாகவும் சாந்தினி புகார் அளித்திருந்த நிலையில் மணிகண்டன் தலைமறைவானார். பெங்களூருவில் இருந்த அவரை கைது செய்து அழைத்து வந்த போலீசார் சைதாப்பேட்டை சிறையில் அடைத்திருந்தனர்.

பின்பு அங்கு அவருக்கு மட்டும் வசதிகள் அதிகம் செய்யப்படுவதாக கூறிய நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மணிகண்டன் வழக்கில் அடையாறு போலீசார் மதுரை, இராமநாதபுரம் போன்ற இடங்களுக்கு நேரில் அவரை அழைத்து சென்று விசாரித்து வரும் நிலையில் அவரது செல்ஃபோன் மட்டும் சிக்கவே இல்லை அவரது ஃபோன் எங்கே என போலீஸ்   விசாரித்து வருகிறார்களாம். இரண்டு ஸ்மார்ட் போன்களை மணிகண்டன் பயன்படுத்திய நிலையில் சாதாரண ஃபோன் ஒன்று மட்டும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாம்.

பாருங்க:  அமைச்சர் முருகன் வீட்டில் டிபன் சாப்பிட்ட பாஜக தலைவர் அண்ணாமலை

More in Latest News

To Top