Latest News
மாம்பழ மில்க் ஷேக் செய்வது எப்படி
தற்போது கோடை காலம் ஆரம்பித்து விட்டது. கோடைகாலத்தில்தான் மாம்பழ வரத்து அதிகமாக இருக்கும். மாம்பழத்தை மதிய சாப்பாட்டோடு மட்டும் சாப்பிட்டால் போரடிக்க ஆரம்பித்து விடும்.
அப்படி போரடிக்காமல் இருக்க மாம்பழ மில்க் ஷேக் செய்வது எப்படி என பார்ப்போம்.
ஒரு மாம்பழத்தை எடுத்து குட்டியாக வெட்டிக்கொள்ளுங்கள்
இப்போது மிக்ஸி ஜாரை எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
இரண்டு கப் ஐஸ்க்ரீம் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்
மிக்ஸி ஜாரில் வெட்டிவைத்த மாம்பழம், சீனி, ஐஸ்க்ரீம் உள்ளிட்டவற்றை சேர்த்துக்கொள்ளுங்கள் அதனுடன் ஒரு டம்ளர் காய்ச்சிய ஆறிய பால் சேர்த்துக்கொள்ளுங்கள். எல்லாவற்றையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக ஓட விடுங்கள் இப்போது சுவையான மில்க் ஷேக் ரெடி.
மில்க் ஷேக் மேல் லேசாக ஐஸ்க்ரீமை கொஞ்சம் போட்டு அதனுடன் மில்க் ஷேக் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
