மங்காத்தா தயாரிப்பாளருக்கு வெங்கட் பிரபுவின் வேண்டுகோள்

79

கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் மங்காத்தா அஜீத், த்ரிஷா. லட்சுமிராய் என பலர் நடித்த இப்படத்தை வெங்கட் பிரபு இயக்கி இருந்தார்.தயாநிதி அழகிரி இப்படத்தை தயாரித்து இருந்தார். அஜீத்தின் மாஸ் படங்களில் ஒன்றாக இது இருந்தது அர்ஜூன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இப்படத்தை வரும் மே 1 அஜீத் பிறந்த நாளை முன்னிட்டு ரீ ரிலீஸ் செய்ய சொல்லி வற்புறுத்தியுள்ளார் வெங்கட் பிரபு. இது தொடர்பாக அவர் தயாரிப்பாளர் தயாநிது அழகிரிக்கு டுவிட் செய்துள்ளார்.

தல பிறந்த நாள் மே 1 வருவதால் மங்காத்தா படத்தை ஏப்ரல் 30 ரீ ரிலீஸ் பண்ணிங்கன்னா ரசிகர்களாகிய எங்களுக்கு மகிழ்ச்சி என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

பாருங்க:  வலிமைதான் அடுத்த மங்காத்தா! இயக்குனர் டிவிட்டால் குஷியான ரசிகர்கள்!
Previous articleதிருமணத்துக்கு பெண் கேட்டு காவல்துறையை நாடிய நபர்
Next articleபனியில் குடும்பத்துடன் ரம்பா