Latest News
மந்திரத்தை எங்கு ஜெபித்தால் என்ன மாதிரியான பலன் கிடைக்கும்
எந்த ஒரு மந்திரத்தையும் வீட்டில் ஒரு முறை ஜெபித்தால் பத்து முறை ஜெபித்த பலன் கிடைக்கும்!
அருகிலுள்ள பழமையான ஆலயத்திற்கு உள்ளே ஜெபித்தால் ஆயிரம் முறை ஜெபித்த பலன் கிடைக்கும் !
தமிழ்நாட்டில் உள்ள நதிக்கரையோரம் ஜெபம் செய்தால் ஆயிரம் முறை ஜெபித்த பலன் கிடைக்கும்!
கரிவலம்வந்தநல்லூர் என்ற ஊரில் உள்ள அருள்மிகு பால்வண்ணநாதர் திருக்கோயில் உள்ளே ஒரு மந்திரத்தை ஜெபித்தால் 10,000 முறை ஜெபித்த பலன் கிடைக்கும் !
கடலோரம் ஒரு மந்திரத்தை ஒரு முறை ஜெபித்தால் ஒரு கோடி முறை ஜெபித்து பலன் கிடைக்கும்!!
மலை மீது இருக்கும் கோயில் பகுதியில் ஒரு மந்திரத்தை ஒருமுறை ஜபித்தால் இரண்டு கோடி முறை ஜெபித்த பலன் கிடைக்கும் !!
சூரிய கிரகணம் சந்திரகிரகணம் தமிழ் மாத பிறப்பு தமிழ் வருடப்பிறப்பு போன்ற நாட்களில் ஜெபம் செய்யப்படும் மந்திரம் மேலே சொல்லப்பட்ட எண்ணிக்கை பெருக்கல் 100 கோடி மடங்கு பலனை தரும்!!!
ஒரு போதும் வெறும் தரையில் அமர்ந்து எந்த ஒரு மந்திரத்தையும் ஜெபிக்க கூடாது .
முறைப்படி விரிப்பு விரித்து ஜெபிக்கவேண்டும் .
மூல மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை மட்டும் முறைப்படி தீட்சை பெற்ற பிறகுதான் ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும்.
மற்றபடி
விநாயகர்அகவல்
கந்தசஷ்டிகவசம்
சிவபுராணம்
திருமந்திரம்
நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருப்பாவை
திருவெம்பாவை
கந்தரலங்காரம் போன்றவைகளை தீட்சை வாங்காமல் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் மனதுக்குள் ஜெபிக்கலாம் அல்லது வாய்விட்டு பாடலாம் .
ஜெபம் செய்யும் இடம் தூய்மையாக இருக்க வேண்டும் .
ஜெபம் செய்பவர் கண்டிப்பாக அசைவம் சாப்பிடக் கூடாது! மது அருந்தக் கூடாது!! போதைப்பொருட்கள் பயன்படுத்தக் கூடாது!!!
மந்திர ஜெபத்தின் மூலமாக மட்டுமே சாதாரண மனிதனால் சித்தராகவும் ஆக முடியும்!!!
