Latest News
காதல் திருமணம் செய்த பெண்- பஸ்ஸில் வைத்து பெண்ணின் அண்ணன்கள் செய்த காரியம்
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் அருகில் உள்ள தங்கச்சி மடத்தை சேர்ந்தவர் பில்கேஸ் 22 வயதான இவர் அதே ஊரை சேர்ந்த ஜஸ்டின் என்பவரது மகனான வினித்தை காதலித்தார். இதற்கு பில்கேசின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் காதல் ஜோடி கோவை தப்பி சென்ற நிலையில் நேற்று ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர். போலீசார் பெற்றோரிடம் பேச்சு வார்த்தை நடத்தி திருமணம் செய்து வைத்தனர். பின்னர் மணமக்கள் அரசு பேருந்தில் தங்கச்சிமடம் சென்றுகொண்டிருந்தனர்.
மண்டபம் பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றது. அப்போது பில்கேசின் அண்ணன்கள் யாகப்பா, ஆண்டனி ஆகியோர் பேருந்தில் ஏறினார்கள். தொடர்ந்து அவர்கள் இருவரும் வாள் மற்றும் பிளேடால் தங்கை பில்கேஸ், அவரது காதல் கணவர் வினித் ஆகியோரை திடீரென வெட்டினார்கள்.வினித்தின் பெற்றோர் ஜஸ்டின், குளோரியா இதனை தடுக்க முயன்றபோது அவர்களுக்கும் வாள், பிளேடால் வெட்டு விழுந்தது.
உடனே பயணிகள் அலறியடித்து ஓடிய நிலையில் அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் வெட்டியவர்களை மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்கள் போலிசில் ஒப்படைக்கப்பட்டனர்.
