Entertainment
மாநாடு படத்திற்கு சீமான் பாராட்டு
மாநாடு திரைப்படம் கடந்த 25ம் தேதியன்று ரிலீஸ் ஆனது முதல் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.சிம்பு நடித்து 10 வருடத்துக்கு பின் வந்திருக்கும் சிறப்பான திரைப்படம் என இந்த படத்தை போற்றி புகழ்ந்து வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த படத்தை பாராட்டாத நபர்களே இல்லை எனலாம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் இப்படத்தை பார்த்து விட்டு பாராட்டியுள்ளார். எனது தம்பி சிலம்பரசன் என பெருமையாக கூறியுள்ள சீமான், மாறுபட்ட திரைக்கதையோட்டமும், விறுவிறுப்பு குறையாத காட்சிகளும் படத்தோடு நம்மை ஒன்ற செய்துவிடுகிறது என கூறியுள்ளார்.
