Connect with us

2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் – வாலிபருக்கு தேர்ந்த கதி

Tamil Flash News

2 மனைவிகள் இருக்கும் போது 3வது திருமணம் – வாலிபருக்கு தேர்ந்த கதி

மூன்றாவது திருமணம் செய்ய முயன்ற நபரை முதல் 2 மனைவிகள் அடித்து உதைத்த சம்பவம் கோவை மாவட்டம் சூலூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் சூலூர் நேரு நகர் பகுதியில் வசித்து வருபவர் அரவிந்த் தினேஷ்(26). இவர் ராசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பேட்டன் மேக்கராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2014ஆம் ஆண்டு திருப்பூர் கணபதி பாளையத்தை சேர்ந்த பிரியதர்ஷினி என்ற பெண்ணை திருமணம் செய்தார். ஆனால் திருமணம் முடிந்து 15 நாட்களிலேயே பிரியதர்ஷ்னியை கொடூரமாக அடித்து உதைத்துள்ளார். கைகளால் கீறியும், வயிற்றில் உதைத்தும் சித்ரவதை செய்துள்ளார்.

இதுபற்றி அரவிந்தனின் பெற்றோரிடம் பிரியதர்ஷினி கேட்டபோது அவன் அடிப்பான் என அவர்கள் கூறியுள்ளனர் எனவே இந்த விவகாரம் காவல் நிலையத்திற்கு சென்றது. அதன்பின் அரவிந்தனிடம் வாழ விருப்பம் இல்லாத பிரியதர்ஷினி கடந்த ஐந்து வருடமாக திருப்பூரில் உள்ள தனது தந்தை வீட்டில் வசித்து வருகிறார். அதன்பின் இணையதளம் மூலம் அனுப்பிரியா என்ற பெண்ணை அரவிந்த் திருமணம் செய்தார். அனுப்பிரியாவிற்கு ஏற்கனவே திருமணமாகி, இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அதற்கு சம்மதித்து அரவிந்த் அவரை திருமணம் செய்தார். ஆனால் தனக்கு திருமணமானதை மறைத்து விட்டார். அதன்பின் அனுப்பிரியாவையும் அவர் அடித்து உதைத்து கொடுமைப்படுத்தி உள்ளார். அவரின் குழந்தையை சூடு வைத்து சித்திரவதை செய்துள்ளார். இந்த விவகாரத்திற்கு பின் அனுப்பிரியாவும் தனது தாயார் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில், தற்போது மூன்றாவது திருமணத்திற்கு அரவிந்த் தயாரானார். இணையதளம் மூலம் அவர் மீண்டும் அவர்கள் தேடுவதை தெரிந்து கொண்ட அனுப்பிரியாவும், பிரியதர்ஷினியும் அவரது அவர் பணிபுரியும் இடத்திற்கு சென்று அவரை வெளியே அனுப்புமாறு கூறியுள்ளனர். ஆனால் அலுவலக நிர்வாகம் அவரை வெளியே அனுப்பவில்லை. எனவே சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

எனவே, காவல் நிலையம் செல்வதற்காக அவர் வெளியே வந்தபோது, அங்கு காத்திருந்த பிரியதர்ஷினி மற்றும் அனுப்பிரியாவின் உறவினர்கள் அரவிந்தை அடித்து உதைத்தனர். அதன்பின் போலீசார் அரவிந்தனை மீட்டு காவல் நிலையம் அழைத்து சென்றனர். அதன்பின் அவரை விடுவித்து விட்டனர். எதுவாக இருந்தாலும் நீதிமன்றத்தில் பார்த்துக்கொள்ளுங்கள் என அனுப்பிரியா மற்றும் பிரியதர்சிஷி தரப்பிடம் போலீசார் கூறிவிட்டதாக தெரிகிறது.

More in Tamil Flash News

To Top