வெளிநாட்டிலிருந்து திரும்பிய மனைவி – வீட்டில் 2 வது மனைவியுடன் கணவன் – காவல் நிலையத்தில் பஞ்சாயத்து

195

சென்னை தி.நகரில் வசித்து வருபவர் சரண்குமார்(35). இவர் பிரசாந்தி என்கிற பெண்ணை கடந்த 2010ம் தேதி திருமனம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. ஆனால், கருத்து வேறுபாட்டின் காரணமாக கடந்த 2014ம் ஆண்டு முதல் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். பிரசாந்தி தனது மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், ஒரு மேற்படிப்பிற்காக பிரசாந்தி 2016ம் ஆண்டு வெளிநாடு சென்றார். எனவே, மகளை கணவரிடம் விட்டு சென்றார். 3 ஆண்டுகள் கழித்து இந்தியா திரும்பிய அவர் சென்னை தி.நகரில் உள்ள தனது கணவரின் வீட்டிற்கு சென்றார். அப்போது, அங்கு ராதா என்கிற பெண் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவரை சரண்குமார் 2வது திருமணம் செய்து வாழ்ந்து வந்தது அவருக்கு தெரியவந்தது.

எனவே, இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.விசாரணையில், பிரசாந்தியை விவாகரத்து செய்துவிட்டது போல் போலி ஆவணங்களை தயார் செய்து ராதாவை சரண்குமார் திருமணம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பாருங்க:  விவாகரத்து பெற்ற தம்பதிகளை சேர்த்து வைத்த கொரோனா – இன்ஸ்டாகிராமில் மகிழ்ச்சி!