Tamil Flash News
7 பெண்களை திருமணம் செய்த போலீ சப்-இன்ஸ்பெக்டர் கைது : சென்னையில் அதிர்ச்சி
7 பெண்களை திருமணம் செய்ததோடு, பல பெண்களின் கற்பை சூறையாடிய போலி இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை எலும்பூரை சேர்ந்தவர் கமலா(24) பெயர் மாற்றப்பட்டுள்ளது. இவர் அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த ஜூம் 30ம் தேதி பணிக்கு சென்றவர் வீட்டு திரும்பவில்லை. எனவே, பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. எனவே, கமலாவின் பெற்றோர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். எனவே, போலீசார் தனிப்படை அமைத்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கமலா பணிபுரிந்து வந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராஜேஷ் பிரித்வி அவரை கடத்தி சென்றதும், திருப்பூரில் ஒரு வீட்டில் அவரை சிறை வைத்திருந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. எனவே, அந்த வீட்டை சுற்றி வளைத்த போலீசார் கமலாவை மீட்டனர். ராஜேஷையும் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ராஜேஷ் இதுவரை 7 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தெரியவந்துள்ளது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் ராஜேஷ் வலம் வந்துள்ளார், மருத்துவர், பொறியாளர் என பல பொய்களை கூறியுள்ளார். 20க்கும் மேற்பட்ட பெண்களின் கற்பை சூறையாடியுள்ளார். மருத்துவக்கல்லூரியில் சீட் வாங்கி தருவதாக கூறி ரூ.30 லட்சம் வரை மோசடி செய்துள்ளார்.
அவரிடமிருந்து 100க்கும் மேற்பட்ட செல்போன்கள் சிம்கார்டுகள், போலி ஆதார் அட்டை, போலி சப்-இன்ஸ்பெக்டர் அடையாள அட்டை, ஒரு காவல் அதிகாரி உடை, கை விலங்கு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். ராஜேஷ் மீது திருச்சு, கோவை, ஆந்திரா உள்ளிட்ட பல பகுதிகளிலும் வழக்கு இருக்கிறது.
ஏற்கனவே 6 பெண்களை திருமணம் செய்துள்ள ராஜேஷ், 7வதாக கமலாவை திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தார். இந்நிலையில்தான், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.