கள்ளக்காதல் விவகாரம் – மனைவிக்கு மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்ற கணவன்

299

கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவிக்கு மொட்டையடித்து அவரை ஊர்வலமாக கணவன் இழுத்து சென்ற சம்பவம் ஒடிசா மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒடிசா மாநிலம் பலாசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் நபரின் மனைவி அவருடைய உறவினர் ஒருவருடன் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளார். இதனால், அந்த நபருடன் வெளியே சுற்றுவதையும் அவர் வாடிக்கையாக கொண்டிருந்தார்.

இந்நிலையில், தனது உறவினர்களுடன் வீட்டில் நுழைந்த அப்பெண்ணின் கனவர், அந்த பெண்ணை அடித்து உதைத்து வெளியே இழுத்து வந்தார். அதன்பின் அப்பெண்ணுக்கு மொட்டையடித்து ஊர்வலமாக இழுத்து சென்றனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, இது தொடர்பாக 2 பெண்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாருங்க:  மது அருந்தினால் கொரோனா வருமா? வராதா? ஆய்வு முடிவு!