கிரிக்கெட் சூதாட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது மனைவியின் வாயில் ஆசிட்டை ஊற்றி துடிக்க துடிக்க கொலை செய்த கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலம் மல்டா எனும் பகுதியில் வசிப்பவர் சுவேந்து வந்தார். இவர் கடந்த பல வருடங்களாகவே கிரிக்கெட் விளையாட்டு போட்டிகளின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தார். ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகி, பலரிடமும் கடன் வாங்கி தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இது அவரின் மனைவி அர்பிதா தாஸுக்கு பிடிக்கவில்லை. எனவே, கணவரை கண்டித்தார். ஆனலும், அவர் அதை நிறுத்தவில்லை. மேலும், அவரோடு சேர்ந்து அவரின் குடும்பத்தினர் 4 பேரும் சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
தற்போது ஐபில் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால், சுவேந்து தத்தா சூதாட்டத்தில் ஈடுபட்டார். இதை அர்பிதா தட்டிக்கேட்க, கோபமடைந்த சுவேந்துவும், அவரின் குடும்பத்தினரும் ஆசிட்டை அர்பிதாவின் வாயில் வலுக்கட்டாயமாக ஊற்றியுள்ளனர். இதில், உடல் உறுப்புகள் செயலிழந்து அவர் மரணம் அடைந்தார். அர்பிதாவின் தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமறைவான சுவேந்து மற்றும் அவரின் குடும்பத்தினரை தேடி வருகின்றனர்.