பெண் உடை மாற்றுவதை எட்டி பார்த்த நபர் – கணவர் செய்த வெறிச்செயல்

169

பெருங்குடி அருகே தனது நண்பனை பற்றி காவல் நிலையத்தில் புகார் கொடுத்த பெண்ணை அவரின் கணவரே கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்குடி அருகேயுள்ள கல்லுப்பட்டி எனும் பகுதியில் வசித்து வருபவர் உதயகுமார். இவரின் மனைவி மணிமேகலை. காதல் திருமணம் செய்டு கொண்ட இந்த தம்பதிக்கு 6 வயதில் குழந்தை உள்ளது. உதயகுமார் தினமும் தனது வீட்டில் நண்பர்களோடு சேர்ந்து குடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

இது தொடர்பாக அடிக்கடி கணவன், மனைவிக்கும் இடையே சண்டை வந்துள்ளது. ஆனாலும், அவர் திருந்தவில்லை. நேற்று நண்பர்களோடு வீட்டில் மது அருந்திய போது அவரின் நண்பர்களில் ஒருவரான மாணிக்கவேல், ஒரு அறையில் உடை மாற்றிக்கொண்டிருந்த மணிமேகலையை பார்த்துவிட்டதாக தெரிகிறது. இதில், ஆத்திரமடைந்த மணிமேகலை மாணிக்கவேலுடன் சண்டை போட்டுள்ளார். அதன்பின், இதுபற்றி உதயகுமாரிடமும் முறையிட்டுள்ளார். ஆனால், அவர் இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

இதில் ஆத்திரமடைந்த மணிமேகலை காவல் நிலையம் சென்று புகார் கொடுத்தார். அதன்பின் வீட்டிற்கு திரும்பி அவர் வந்து கொண்டிருந்த போது உதயகுமார் அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் உதயகுமாரை கைது செய்துள்ளனர்.

பாருங்க:  சீனு ராமசாமி விஜய் சேதுபதி கூட்டணி மாமனிதன் பட அப்டேட்