Tamil Flash News
திருமணமாகி ஒரு வாரத்தில் பெண் கொலை – கள்ளக்காதல் காரணமா?
திருமணம் ஆன ஒரே வாரத்தில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட விவகாரம் சென்னை திரிசூலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை திரிசூலம் பகுதியை சேர்ந்தவர் அபின்ஷா. மனிஷா என்கிற பெண்னோடு இவருக்கு காதல் ஏற்படுட கடந்த 5 வருடங்களாக அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். அவர்களின் திருமணத்திற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் வீட்டை விட்டி வெளியேறினர். அதன்பின் உறவினர்கள் ஒருவர் வீட்டில் திருமணம் செய்து கொள்ளாமலேயே வசித்து வந்தனர். அதில் மனிஷா கர்ப்பமடைந்தார். எனவே, இருவரையும் விட்டை விட்டு உறவினர்கள் வெளியேற்றிவிட்டனர்.
அதன்பின் ஒரு வாரத்திற்கு முன்பு அவர்கள் இருவரும் திருமனம் செய்து கொண்டனர். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு மனிஷா தற்கொலை செய்து கொண்டதாக மனிஷாவின் தந்தைக்கு அபின்ஷா தகவல் கூறியுள்ளார்.
ஆனால், மனிஷாவின் தற்கொலையில் சந்தேகமடைந்த உறவினர்கள் அபின்ஷாவின் செல்போனை சோதனை செய்தனர். அதில் அவர் அனிதா என்கிற பெண்னுடன் கள்ளத் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. எனவே, மனிஷாவை அவர் கொலை செய்திருக்கலாம் என கருதிய அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக விசாரணை செய்து வருகின்றனர்.