அண்ணியுடன் கள்ளத்தொடர்பு – நண்பனின் தலையை துண்டித்த வாலிபர்

235

கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபரின் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகேயுள்ள காவிரி ஆற்றில் சில தினங்களுக்கு முன்பு ஒரு வாலிபரின் பிணம் தலை துண்டிக்கப்பட்டு கரை ஒதுங்கி கிடந்தது. போலீசாரின் விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குமாரபாளையத்தை சேர்ந்த சின்ராஜ் என்பது தெரியவந்தது. மேலும், அவரும், அவரின் நண்பர் கூள் குமார் என்பவரும் அடிக்கடி ஒன்றாக மது அருந்துவார்கள் என்பதும் தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து கூள குமாரிடம் நடத்தப் பட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது.

murder

குமாரின் அண்ணியுடன் சின்ராஜ் நெருக்கமாக பழகியுள்ளார். நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதை தெரிந்து கொண்ட குமார் சம்பவத்தன்று சின்ராஜை அழைத்து சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். அதன்பின், தனது அண்ணியுடனான தொடர்பை விட்டுவிடும்படி கூறியுள்ளார். ஆனால், சின்ராஜ் அதற்கு மறுத்துவிட்டார்.

இதனால், ஆத்திரமடைந்த குமார், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் அவரின் தலையை வெட்டி தனியாக ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு ஆற்றில் வீசியுள்ளார். அதன்பின் உடலையும் ஆற்றிலே வீசிவிட்டு சென்றுவிட்டார். போலீசாரின் விசாரணையில் சின்ராஜ் அனைத்து உண்மைகளையும் ஒப்புக் கொண்டார். சின்ராஜின் தலையை கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாருங்க:  இன்று புரட்டாசி சனிக்கிழமை-குருவித்துறை சித்திர வல்லப பெருமாளை தரிசிப்போம்