கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை – கள்ளக்காதல் காரணமா?

202

Man killed his friend in aandipatti – ஆண்டுப்பட்டி அருகே தலையில் கல்லைப் போட்டு தச்சு தொழிலாளி கொலை செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆண்டிப்பட்டி அருகில் உள்ள ஜக்கம்பட்டி பகுதியில் வசித்து வந்தவர் முத்தையா மகன் பாண்டியன் (45). இவர் தச்சு வேலை செய்து வந்தார். இவருக்கு முத்தம்மாள்(38) என்ற மனைவியும், வெண்ணிலா (21) என்கிற மகளும், தமிழ்ச்செல்வன் (12) என்ற மகனும் உள்ளனர்.

நேற்று இரவு அதே பகுதியில் சேர்ந்த சென்றாய பெருமாளும், பாண்டியனும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அதன்பின் ஆரோக்கிய அகம் எனும் இடத்தில் வந்த போது திடீரென பாண்டியனை கீழே தள்ளிய பெருமாள், அங்கிருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. எனவே, போலீசார் அங்கு வந்து பாண்டியனின் உடலை மீட்டு ஆண்டிப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த கொலைக்கு பின்னணியில் கள்ளக்காதல் காரணமாக இருக்குமா என போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

பாருங்க:  ஊரடங்கு இல்லாவிட்டால் பாதிப்பு எண்ணிக்கை எவ்வளவு இருந்திருக்கும்? அதிர்ச்சித் தகவல்!