மீண்டும் ஒரு சாதி அவலம்.. கொட்டும் மழையில் பிணம் எரிப்பு – மதுரையில் அதிர்ச்சி

மீண்டும் ஒரு சாதி அவலம்.. கொட்டும் மழையில் பிணம் எரிப்பு – மதுரையில் அதிர்ச்சி

சாதியை காரணம் காட்டி பட்டியலினத்தவரின் உடலை பொது மயானத்தில் தடை விதிக்கப்பட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு வேலூர் மாவட்டத்தில் சாதியை காரணம் காட்டி பட்டியலினத்தவரின் உடலை ஒரு குறிப்பிட்ட பாதையின் வழியே சுடுகாட்டிற்கு கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் ஒரு பாலத்தின் வழியாக உடலை கயிறு கட்டி இறக்கி அதன்பின் மாயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த விவகாரம் அப்போதே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது அதேபோன்ற ஒரு சம்பவம் மதுரை மாவட்டத்தில் நடந்துள்ளது. மதுரை திருமங்கலம் தாலுக்கா பேரையூர் அருகேயுள்ள சுப்புலாபுரம் பகுதியில் வசிக்கும் பட்டியலின மக்களில் ஒருவர் கடந்த வாரம் மரணமடைந்தார். அவரது உடலை பொதுமயானத்தில் தகனம் செய்ய குறிப்பிட்ட சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததால், சுடுகாட்டின் வெளியே கொட்டும் மழையில் பெட்ரோல் ஊற்றி உடலை தகனம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.