Entertainment
மம்முட்டி மோகன்லாலுக்கு கோல்டன் விசா
மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார்கள் மம்முட்டி மற்றும் மோகன்லால்.சினிமா தவிர இவர்கள் அரபு நாடுகளில் தொழில்களும் செய்கிறார்கள்.
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) சார்பில் வழங்கப்படும் கோல்டன் விசா, 10 வருடம் செல்லத் தக்கதாகும். இந்த கோல்டன் விசா தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள் உள்ளிட்டோருக்கு அந்நாட்டு வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தின் குடிமக்களுக்கு இணையாகக் கருதப்படுவது இதன் சிறப்பம்சம்.
இந்த கோல்டன் விசா ஏற்கனவே பிரபல பாலிவுட் நடிகர்கள் ஷாருக் கான், சஞ்சய் தத், டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் ஏற்கனவே பெற்றுள்ளனர். மேலும் தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஆயுர்வேத மருத்துவரான நஸ்ரின் பேகம் என்பவருக்கும் கடந்த சில நாட்களுக்கு முன் இந்த விசா வழங்கப்பட்டது.
இந்நிலையில், பிரபல நடிகர்கள் மம்மூட்டி மற்றும் மோகன்லாலுக்கு இந்த கோல்டன் விசாவை, ஐக்கிய அரபு அமீரகம் வழங்கி கவுரவித்துள்ளது. மலையாள நடிகர்களுக்கு இந்த விசா வழங்கப்படுவது இதுதான் முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
