3 தொகுதிகளில் இடைத்தேர்தல் ; மக்கள் நீதி மய்யம் திட்டம் என்ன? – கமல்ஹாசன் அறிவிப்பு

163
Kamalhaasn comment on election alliance

தமிழகத்தில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்த காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ. கடந்த மக்களவை தேர்தலில் கன்னியாகுமாரி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று எம்.பி.ஆனார். எனவே, நங்குநேரி தொகுதி காலியாக உள்ளது.

அதேபோல், விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ ராதாமணி கடந்த ஜூன் மாதம் உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். எனவே, இந்த 2 தொகுதிகளில் வருகிற அக்டோபர் 21ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 24ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கவுள்ளது. அதேபோல், புதுச்சேரியில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் திமுது, அதிமுக கட்சிகள் போட்டியிடவுள்ளன.

இந்நிலையில், இந்த இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என என கமல்ஹாசன் அறிவித்துள்ளார். 2021ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை கைப்பற்ற மக்கள் நீதி மய்யம் முனைப்போடு விரைவாக முன்னேறி வருகிறது. இடைத்தேதல் எனும் ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் பங்கெடுக்காது என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

பாருங்க:  ரூ.2000 நிதியுதவி கணக்கெடுப்பு பணி நிறைவடையாததால் சிக்கல்!