அமெரிக்காவில் ஜெயலலிதாவாக மாறும் கங்கனா ரணாவத் -புகைப்படங்கள் இதோ!

161
kangana

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய் ‘ தலைவி’ என்கிற படத்தை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜெயலலிதா வேடத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளார். இப்படத்தில் ஜெ.வின் இளைமை பருவம் வரை முதுமை வரை மொத்தம் 4 தோற்றங்களில் அவர் தோன்றவுள்ளார். இதற்காக அவருக்கு மேக்கப் டெஸ் அமெரிக்கவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஒரு ஸ்டுடியோவில் எடுக்கப்பட்டு வருகிறது. அமெரிக்க ஒப்பனை கலைஞர்கள் இதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்காக கங்கனா ரணாவத் அமெரிக்கா சென்றுள்ளார்.

இந்நிலையில், கங்கனா ரணாவத்திற்கு ஒப்பனை கலைஞர்கள் ஒப்பனை செய்யும் புகைப்படங்களை அவரின் குழு தங்களின் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

 

பாருங்க:  கொரொனா பாதிப்பு… தமிழ்நாடு, இந்தியா, உலகம்! நிலவரம் என்ன?