Latest News
முகத்தை சுத்தப்படுத்தும் ஸ்க்ரப் வீட்டிலேயே செய்வது எப்படி
அழகு சாதன பொருட்கள் விற்கும் கடைகளில் ஸ்க்ரப் ஒன்று விற்கப்படும். பெரும்பாலும் பெண்கள் அனைவரும் ஸ்க்ரப்பை அறிந்திருப்பார்கள். இதை முகத்தில் பூசி சிறிது 5 நிமிடத்துக்கு பின் முகத்தை நன்றாக தேய்த்து கழுவ வேண்டும் இதனால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் மறையும்.
முகத்துக்கு ரத்த ஓட்டம் கிடைக்கும். இது கடையில் கிடைத்தாலும் வீட்டிலேயே இருக்கும் இயற்கை பொருட்களை வைத்து ஸ்க்ரப் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேங்காயை துண்டுகளாக்கி மசித்துக்கொள்ளவும். மஞ்சள் 1 சிட்டிகை கலந்து அதில் சந்தன எண்ணெய் 10 துளிகள் சேர்க்கவும். இந்த கலவையை 5 நிமிடங்கள் முகத்தில் மென்மையாக ஸ்கரப் செய்து பிறகு முகத்தை கழுவி எடுக்கலாம். சருமத்துக்கு ஈரப்பதத்தையும் குளிரூட்டும் வேலையையும் இது செய்கிறது.
ஆரஞ்சு சருமத்தில் இறந்த செல்களை வெளியேற்ற உதவுகிறது. ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடியாக்கி ரவைபோன்று சலித்து வைக்கவும்.
இதில் தயிர் அல்லது பால், எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் பதத்துக்கு ஆக்கி முகம் மற்றும் கழுத்து பகுதியில் தடவி மெதுவாக மசாஜ் செய்யவும். இதை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும். ஆரஞ்சு தூள் ஸ்கரப் எல்லா சருமத்தினருக்கும் ஏற்றது.
