பிரபல ஹிந்தி நடிகையாக ஒரு காலத்தில் வலம் வந்தவர் ட்விங்கிள் கண்ணா இவர் நடிகர் அக்சய்குமாரின் மனைவியாவார். ஒரு காலத்தில் பிஸியான நடிகையாக வலம் வந்த இவர் கடந்த 2015 முதல் சினிமாவில் ஈடுபடாமல் ஜர்னலிசம் பக்கம் தன் பாதையை திருப்பினார். அதிக புத்தகங்களை எழுத துவங்கினார்.
சமீபத்தில் இவர் பாகிஸ்தானை சேர்ந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலாவை தனது யூ டியூப் சேனலுக்காக பேட்டி எடுத்துள்ளார். மலாலா பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதால் கடந்த 2012 ல் தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டார் பின்பு லண்டனிலேயே தங்கி இருந்தார். மருத்துவங்கள் எல்லாம் லண்டனிலேயே பார்த்து அங்கேயே செட்டில் ஆகி விட்டார் மலாலா. தொடர்ந்து பெண்கள் முன்னேற்றத்துக்காக பாடுபட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இவரிடம் பேட்டி எடுத்த போது அவர் கூறிய கதைகள் ட்விங்கிள் கண்ணாவுக்கு கண்ணீரை வர வைத்ததாம். அவரை பேட்டி எடுப்பதற்காக நிறைய மேக் அப் எல்லாம் போட்டு போய் உட்கார்ந்தாராம் டவிங்கிள், மலாலா தன் கதையை சொல்ல சொல்ல கண்ணீர் பெருகி போட்டு இருந்த மேக் அப் எல்லாம் போய் விட்டது என உருக்கமுடன் மலாலாவுக்காக வருத்தப்பட்டுள்ளார் ட்விங்கிள் கண்ணா.